Thursday, January 7, 2010
Wednesday, December 23, 2009
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் கருணாநிதி, அரசின் சாதனைகள், செயல்பாடுகள் மக்களை சென்றடைவதால் வெற்றி கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.மேலும் இரு தொகுதிகளின் வாக்காளர்களுக்கும் முதலமைச்சர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.இதேபோல் கருத்து தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்ததுதான்'' என்று கூறியுள்ளார்.''தமிழக அரசின் சாதனைக்கு கிடைத்த வெற்றி'' என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
அடா! என்ன சாதனை! என்ன சாதனை! வாக்களர்களுக்கு குடியும் (அடுத்த முறை கூத்தியும் ) கொடுத்து பெற்ற சாதனைதான் . எதிர்பார்த்ததுதான் என்கிறார் தளபதி நீர் என்ன எதிர்பார்ப்பது .எதிர்பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் கொடுத்து நீங்கள் எதிர்பார்த்ததை நாங்கள் நேற்றே சொல்லிவிட்டோமே. மானம் சுடு சொரணை அற்ற தமிழ் மக்களே -- உங்கள் வசனம் தான்!
Monday, December 21, 2009
குடி(!) மகன் கள் அசரப்போவதில்லை.
இன்று ஜயா வில் பார்த்திருக்கலாம். ஏதோ கல்லூரி அட்மிஷன் போல ஒரு பெண் ஒரு ரெஜிஸ்டரில் எழுதிக்கொள்கிறாள்; அந்த அமைச்சர் தன் கையால் ஒரு சட்டையும் சின்ன புட்டியும்(உண்மை) எடுத்துக் கொடுக்க ரொம்பவே(தொ.கா.தொகுப்பாளினி களின் கைங்கரியம்!)
அமைதியாக வரிசயில் நின்று ஒவ்வொருவராக வாங்கிசென்றனர்.இந்தக்கேவலத்தின் முழுப் பொறுப்பாளி கலைஞரே. அவருக்குக் கொடுக்கவேண்டிய பட்டம் இனமானம் காத்தவர் அல்ல ; இனமானம் அழித்தவர் என்பதே. ஆனாலும் அந்த பட்டத்தையும் வாங்கிக்கொள்ளத் தயார் என்பதும் நகைப்புக்கிடமான உண்மை.
Saturday, December 19, 2009
எப்பிடி மதியம் 2 மணி வரை 40 விழுக்காடாக இருந்த ஓட்டுப்பதிவு பதிவு முடியும் போது 80 சதமானது?
ஆக இந்த முறையும் தில்லு முல்லு கட்சிதான் .
மானங்கெட்ட அரசியல் வேட்பாளர்கள் ;சோரம் போன வாக்காளர்கள். கைக்கூலிகளும் கையாலாகாதவர்களும் கலந்து காணும் அதிகாரிகள்
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் ..
எவ்வளவு பொருத்தமாக பாடினாயடா என் பாரதியே ...!
எண்டா இதுக்கு முடிவே இல்லையா ? என்னது ?
தலை சிறந்த உலக தமிழ் படைப்பாளியா ?
வழிச்சுக்கிட்டு சிரிப்பான் வே.
சும்மா வந்திட்டான் போயிட்டான் னு எழுதிட்டா உலகில் சிறந்த படைப்பாளி ஆயிட முடியுமா? பப்பாளி தான் ஆகமுடியும்
விவஸ்தை வெக்கம் ஒண்ணுமே கிடையாதா வாங்கற(!) வங்களுக்கும் கொடுக்கரவங்களுக்கும்?
Wednesday, December 16, 2009
Monday, November 9, 2009
6000
சட்டகல்லூரியில் மிருக வெறி கொண்டு ஒருவரையொருவர் (மாணவர்கள்) தாக்கிக்கொண்ட போது வேடிக்கை பார்த்தபோது எங்கையா போச்சு இந்த அதீத அக்கறை?
வெறும் இருநூறு பேர் கூட இல்லாத ஆர்பாட்டத்தை அடக்க ஆறாயிரம் பேரா? நடத்தித்தான் பார்க்கட்டுமே நிலம் என்ன அசையும் சொத்தா என்ன எடுத்துக்கொண்டு ஓடுவதற்கு?
யார் ஆகவும் இருக்கட்டுமே? 600 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை வைத்துக்கொண்டு ஒருவர் என்ன பண்ண முடியும்? இத்துணை (பே)ராசை உள்ள ஒருவரால் சமன் செய்து சீர் தூக்கி ஒரு பால் கோடாமல் எப்படி இருக்க முடியும்?
சட்டம் நீதி இவற்றின் பால் சாதாரண மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையல்லவா ஆட்டம் காணும்?.....
