Wednesday, December 23, 2009

‌திரு‌ச்செ‌ந்தூ‌ர், வ‌ந்தவா‌சி தொகு‌தி‌ இடை‌த்தே‌‌ர்த‌லி‌ல் ‌தி.மு.க. வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது கு‌றி‌த்து கரு‌த்து தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ள முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, அர‌சி‌ன் சாதனைக‌ள், செய‌ல்பாடுக‌ள் ம‌க்களை செ‌ன்றடைவதா‌ல் வெ‌ற்‌றி ‌கிடை‌த்து‌ள்ளது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.மேலு‌ம் ‌‌இரு தொகு‌திக‌ளி‌ன் வா‌க்காள‌ர்களு‌க்கு‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ந‌ன்‌றி தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.இதேபோ‌ல் கரு‌த்து தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ள துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌‌லி‌ன், ''இடை‌த்தே‌ர்த‌ல் வெ‌ற்‌றி எ‌தி‌ர்பா‌ர்‌த்ததுதா‌ன்'' எ‌‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.''த‌மிழக அர‌சி‌ன் சாதனை‌க்கு ‌கிடை‌த்த வெ‌ற்‌றி'' எ‌ன்று ம‌த்‌‌திய அமை‌ச்ச‌ர் மு.க.அழ‌கி‌ரி கரு‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அடா! என்ன சாதனை! என்ன சாதனை! வாக்களர்களுக்கு குடியும் (அடுத்த முறை கூத்தியும் ) கொடுத்து பெற்ற சாதனைதான் . எதிர்பார்த்ததுதான் என்கிறார் தளபதி நீர் என்ன எதிர்பார்ப்பது .எதிர்பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் கொடுத்து நீங்கள் எதிர்பார்த்ததை நாங்கள் நேற்றே சொல்லிவிட்டோமே. மானம் சுடு சொரணை அற்ற தமிழ் மக்களே -- உங்கள் வசனம் தான்!

Monday, December 21, 2009

இதற்கும் தமிழக
குடி(!) மகன் கள் அசரப்போவதில்லை.
இன்று ஜயா வில் பார்த்திருக்கலாம். ஏதோ கல்லூரி அட்மிஷன் போல ஒரு பெண் ஒரு ரெஜிஸ்டரில் எழுதிக்கொள்கிறாள்; அந்த அமைச்சர் தன் கையால் ஒரு சட்டையும் சின்ன புட்டியும்(உண்மை) எடுத்துக் கொடுக்க ரொம்பவே(தொ.கா.தொகுப்பாளினி களின் கைங்கரியம்!)
அமைதியாக வரிசயில் நின்று ஒவ்வொருவராக வாங்கிசென்றனர்.இந்தக்கேவலத்தின் முழுப் பொறுப்பாளி கலைஞரே. அவருக்குக் கொடுக்கவேண்டிய பட்டம் இனமானம் காத்தவர் அல்ல ; இனமானம் அழித்தவர் என்பதே. ஆனாலும் அந்த பட்டத்தையும் வாங்கிக்கொள்ளத் தயார் என்பதும் நகைப்புக்கிடமான உண்மை.

Saturday, December 19, 2009

எப்பிடி மதியம் 2 மணி வரை 40 விழுக்காடாக இருந்த ஓட்டுப்பதிவு பதிவு முடியும் போது 80 சதமானது?

ஆக இந்த முறையும் தில்லு முல்லு கட்சிதான் .

மானங்கெட்ட அரசியல் வேட்பாளர்கள் ;சோரம் போன வாக்காளர்கள். கைக்கூலிகளும் கையாலாகாதவர்களும் கலந்து காணும் அதிகாரிகள்

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் ..

எவ்வளவு பொருத்தமாக பாடினாயடா என் பாரதியே ...!

தமிழுக்கு செம்மொழி சீர்பெற்றுத்தந்த பெருந்தகையும், உலகத்தமிழ் செம்மொழி மாநாடு காணும் வரலாற்று பெருமை வாய்ந்தவரும், தமிழ் இன மொழி மேம்பாட்டுக்காக தம் வயதில் எழுபது ஆண்டுகளை அள்ளித் தந்தவரும், தமிழகத்தின் முதலமைச்சராய் ஐந்து முறை அரசாள்பவரும், தமிழில் தலைசிறந்த உலக படைப்பாளியுமான முத்தமிழறிஞர் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌க்கு மூத்த தமிழ் சங்கமாகிய கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் தமிழ்த் தலைமகன் என்ற சிறப்பு விருதளித்து மகிழ்கிறது'' என்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

எண்டா இதுக்கு முடிவே இல்லையா ? என்னது ?
தலை சிறந்த உலக தமிழ் படைப்பாளியா ?
வழிச்சுக்கிட்டு சிரிப்பான் வே.
சும்மா வந்திட்டான் போயிட்டான் னு எழுதிட்டா உலகில் சிறந்த படைப்பாளி ஆயிட முடியுமா? பப்பாளி தான் ஆகமுடியும்
விவஸ்தை வெக்கம் ஒண்ணுமே கிடையாதா வாங்கற(!) வங்களுக்கும் கொடுக்கரவங்களுக்கும்?

Wednesday, December 16, 2009

ஆனாலும் இந்த அழும்பு ஆகாதுடா இவன்என்னடான்னா தெலிங்கான வாங்கியே
தீருவேன் எங்கிறான் அவன் என்னடான்னா யுனிடெட் ஏ பி இல்லென்ன சாவுன்றான்.
எவன் எங்க்டா இருக்கீங்க?

பி ஜெ பி க்கு தெலிங்கான வேணுமா வேண்டாமா? ஒண்ணும் புரியல்யே
பின்ன் என்ன எழவுக்கு தேசிய்க் க்ட்சி ன்னு பட்டம்?

உதிரி உதிரியா போய்கினே இருந்துதுன்னு வை; நாளைக்கு நூறு காவேரி தீர்ப்பாயங்களும் ஆயிரம் முல்லைப்பெரியார்களும் வந்து தொலைக்கும்

வடமேற்கேயிருந்து துலுக்கனும் வடகிழக்கேயிருந்து மஞ்சக்குள்ளனுக்ளும் தெக்கெயிருந்து வெட்டிபேராளிகளும் இங்கே பங்கு போடுவனுக இங்கேயுள்ள கைக்கூலிகளும்,இனமானிகளும்(!) எல் ஈ டிக் களும் சேந்துக்கினு சோரம் போவானுக.நாம பாத்து வாயில எதையாவது வச்சுக்கணமா

ஏண்டா இதுக்காடா படேலய்யா கஷ்டப்பட்டாரு? ஓழுங்கா மத்தவன்ய சொறண்டாம் நியாயமா நடந்திருந்தா இப்படி வருமா? எல்லாம் அந்த மொழிவாரியா பிரிச்ச முட்டாப்பயலச் சொல்லணும்.
இந்த ஊரு திருடஙளும் நாளைக்கு தெக்க தம்பிக்கு வடக்க அன்ணனுக்குனு பேசுவான். ஜெ வாயில ச்க்கரைய அள்ளித்தான் போடணும்.

Monday, November 9, 2009

6000

என்ன அக்கறை? என்ன அக்கறை?? சட்ட ஒழுங்கு ப்ரச்னையில் இந்த அரசுக்கு? உடல் புல்லரிக்கிறதே?!
சட்டகல்லூரியில் மிருக வெறி கொண்டு ஒருவரையொருவர் (மாணவர்கள்) தாக்கிக்கொண்ட போது வேடிக்கை பார்த்தபோது எங்கையா போச்சு இந்த அதீத அக்கறை?
வெறும் இருநூறு பேர் கூட இல்லாத ஆர்பாட்டத்தை அடக்க ஆறாயிரம் பேரா? நடத்தித்தான் பார்க்கட்டுமே நிலம் என்ன அசையும் சொத்தா என்ன எடுத்துக்கொண்டு ஓடுவதற்கு?
யார் ஆகவும் இருக்கட்டுமே? 600 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை வைத்துக்கொண்டு ஒருவர் என்ன பண்ண முடியும்? இத்துணை (பே)ராசை உள்ள ஒருவரால் சமன் செய்து சீர் தூக்கி ஒரு பால் கோடாமல் எப்படி இருக்க முடியும்?
சட்டம் நீதி இவற்றின் பால் சாதாரண மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையல்லவா ஆட்டம் காணும்?.....

Sunday, November 8, 2009

நாட்டின் நிலை

நாளுக்கு நாள் விஷயம் கேவலமாகிக்கொண்டே போகிறது
ஆக பி ஜெ பி யும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் பணக்கார முதலைகள் தான் இங்கேயும் ....
மற்ற கட்சி களும் குறைந்தவை அல்ல.
என்ன தெளிவாகிறது என்றால் நாட்டில் இரண்டே இரண்டு கூட்டம் தான்.ஓன்று ஆளும் அரசியல்வாதிகளின் கூட்டம்;இன்னொன்று ஆளப்படும் முட்டாள்கள்(மக்கள் என்று படிக்கவும்) கூட்டம். இதில் நியாயம் நீதி நேர்மை என்பதெல்லாம் வெறும் பேத்தல்.ஓட்டுப்போடாதவர்கள் சரியாத்தான் சொல்கிறார்கள் ;யாராண்டால் என்ன?எல்லாம் ஒன்றேதான்.கையும் தாமரையும் திருட்டுத்தனமாக கை குலுக்கிகொள்கின்றன.இந்த ரீதியில் இந்தியாவை யாரலும் காப்பாற்ற முடியாதுடா சாமீ!

Saturday, November 7, 2009

தீ படம் என்ன சொல்கிறது

ரொம்பவே க்ரூட் ஆகா இருந்தாலும் இன்றைய நிலையும் ஏறத்தாழ இதுபோலதான் உள்ளது. என் எதிர்பார்ப்பில் போலீஸ் வேலைநிறுத்தம் வராது .ஆனால் யாராவது ஒரு ஆள் இவர்கள் அத்தனை பேரயும் போட்டுத்தள்ளி விட்டு தானே ஒரு சர்வாதிகாரி ஆகி நம் அத்தனை பேரயும் படாத பாடு படுத்தப்ப்போகிறான் அவனும் ஹிட்லரைப்போல் இறப்பான்