திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் கருணாநிதி, அரசின் சாதனைகள், செயல்பாடுகள் மக்களை சென்றடைவதால் வெற்றி கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.மேலும் இரு தொகுதிகளின் வாக்காளர்களுக்கும் முதலமைச்சர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.இதேபோல் கருத்து தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்ததுதான்'' என்று கூறியுள்ளார்.''தமிழக அரசின் சாதனைக்கு கிடைத்த வெற்றி'' என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
அடா! என்ன சாதனை! என்ன சாதனை! வாக்களர்களுக்கு குடியும் (அடுத்த முறை கூத்தியும் ) கொடுத்து பெற்ற சாதனைதான் . எதிர்பார்த்ததுதான் என்கிறார் தளபதி நீர் என்ன எதிர்பார்ப்பது .எதிர்பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் கொடுத்து நீங்கள் எதிர்பார்த்ததை நாங்கள் நேற்றே சொல்லிவிட்டோமே. மானம் சுடு சொரணை அற்ற தமிழ் மக்களே -- உங்கள் வசனம் தான்!
