என்ன அக்கறை? என்ன அக்கறை?? சட்ட ஒழுங்கு ப்ரச்னையில் இந்த அரசுக்கு? உடல் புல்லரிக்கிறதே?!
சட்டகல்லூரியில் மிருக வெறி கொண்டு ஒருவரையொருவர் (மாணவர்கள்) தாக்கிக்கொண்ட போது வேடிக்கை பார்த்தபோது எங்கையா போச்சு இந்த அதீத அக்கறை?
வெறும் இருநூறு பேர் கூட இல்லாத ஆர்பாட்டத்தை அடக்க ஆறாயிரம் பேரா? நடத்தித்தான் பார்க்கட்டுமே நிலம் என்ன அசையும் சொத்தா என்ன எடுத்துக்கொண்டு ஓடுவதற்கு?
யார் ஆகவும் இருக்கட்டுமே? 600 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை வைத்துக்கொண்டு ஒருவர் என்ன பண்ண முடியும்? இத்துணை (பே)ராசை உள்ள ஒருவரால் சமன் செய்து சீர் தூக்கி ஒரு பால் கோடாமல் எப்படி இருக்க முடியும்?
சட்டம் நீதி இவற்றின் பால் சாதாரண மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையல்லவா ஆட்டம் காணும்?.....
Monday, November 9, 2009
Sunday, November 8, 2009
நாட்டின் நிலை
நாளுக்கு நாள் விஷயம் கேவலமாகிக்கொண்டே போகிறது
ஆக பி ஜெ பி யும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் பணக்கார முதலைகள் தான் இங்கேயும் ....
மற்ற கட்சி களும் குறைந்தவை அல்ல.
என்ன தெளிவாகிறது என்றால் நாட்டில் இரண்டே இரண்டு கூட்டம் தான்.ஓன்று ஆளும் அரசியல்வாதிகளின் கூட்டம்;இன்னொன்று ஆளப்படும் முட்டாள்கள்(மக்கள் என்று படிக்கவும்) கூட்டம். இதில் நியாயம் நீதி நேர்மை என்பதெல்லாம் வெறும் பேத்தல்.ஓட்டுப்போடாதவர்கள் சரியாத்தான் சொல்கிறார்கள் ;யாராண்டால் என்ன?எல்லாம் ஒன்றேதான்.கையும் தாமரையும் திருட்டுத்தனமாக கை குலுக்கிகொள்கின்றன.இந்த ரீதியில் இந்தியாவை யாரலும் காப்பாற்ற முடியாதுடா சாமீ!

Saturday, November 7, 2009
தீ படம் என்ன சொல்கிறது
ரொம்பவே க்ரூட் ஆகா இருந்தாலும் இன்றைய நிலையும் ஏறத்தாழ இதுபோலதான் உள்ளது. என் எதிர்பார்ப்பில் போலீஸ் வேலைநிறுத்தம் வராது .ஆனால் யாராவது ஒரு ஆள் இவர்கள் அத்தனை பேரயும் போட்டுத்தள்ளி விட்டு தானே ஒரு சர்வாதிகாரி ஆகி நம் அத்தனை பேரயும் படாத பாடு படுத்தப்ப்போகிறான் அவனும் ஹிட்லரைப்போல் இறப்பான்
Subscribe to:
Comments (Atom)